4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மற்றும் ட்ரைவர் கைது…!!!

திருநெல்வேலி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி அருகே கணக்குபிள்ளைவலசையில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றும் இளையராஜா என்பவரும், பஸ் டிரைவர் பரமசிவன் என்பவரும் 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment