நள்ளிரவில் உயிரிழந்தார் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் !!!!
தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மகேந்திரன் இவருக்கு வயது 52 ஆகிறது இவர் சென்னை தி .நகரில் நடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார் .
இவருடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அருண் (22), ராஜசேகர் (25), தமிழ் (24) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர் .கூட்டம் முடிந்த பிறகு இவர்கள் சென்னையில் இருந்து தர்மபுரிக்கு திரும்பி உள்ளனர்.காரை டிரைவர் வெங்கடேஷ் ஓட்டி சென்றுள்ளார் .இது வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த லஷ்மிபுரம் என்ற இடத்தில் கார் திடீர்ரென டிரைவர் வெங்கடேஷின் கட்டுப்பாட்டை இழந்தது .
மேலும் கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது .இதற்கு ரஜினி அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் .