4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி திணறல் ..!இந்திய அணி அபார பந்துவீச்சு …!
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது.
இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 193,பண்ட் 159*,ஜடேஜா 81,அகர்வால் 77 ரன்கள் அடித்தனர்.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.83.3 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் அடித்துள்ளது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமா ஹாரிஸ் 79 ரன்கள் அடித்தார்.களத்தில் கம்மின்ஸ் 25*,பீட்டர் 28 *ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் 3,ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வருகிறது.