2022ஆம் ஆண்டில் 36 ரபேல் விமானங்களும் வழங்கப்படும்…!மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும், 2022ஆம் ஆண்டில் 36 ரபேல் விமானங்களும் வழங்கப்படும் . ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.
தேச பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது .காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.