ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த பெண்கள்..விரைவில் புதிய பெயர் பட்டியல்…!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த பெண்கள் விவரம் அடங்கிய புதிய பட்டியலை தயாரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிந்து மற்றும் கனகதுர்கா தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கு விசாரணையில் கேரள அரசு இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலை 51 பெண்கள் தரிசனம் செய்ததாக அறிக்கை அளித்தது.
இந்நிலையில் கேரள மாநில அரசு அறிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கேரள அரசு பெண்கள் தரிசனம் செய்த பெயர் பட்டியலில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு புதிய பெயர் பட்டியல் வெளியிடப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.