மழைக்காலங்களில் என்ன உணவுகள் சாப்பிடணும் தெரியுமா…?
மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவு முறைகள் சரியாக இருக்க வேண்டும். நமக்கு விருப்பப்பட்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் அது நமது உடலுக்கு பல சிக்கல்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. இதனால் நாம் மழைக்காலங்களில் உண்ணும் உணவு முறைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
நிலவேம்பு தூள் :
மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல்கள் பரவாமல் இருக்க, நாம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை வெந்நீரில், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து கொடுத்தால் காய்ச்சல்கள் வருவதற்கு முன்பே அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
கீரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் :
மழைக்காலங்களில் கீரைகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலரின் உடலுக்கு இது ஒத்து கொண்டாலும், சிலருக்கு ஒத்து கொள்ளாமல் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
சற்று சூடாக சாப்பிட வேண்டும் :
மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மழைக்காலங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என தோன்றும் போது கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகளை வாங்கி சாப்பிடாமல் உப்புமா, இட்லி, தோசை மற்றும் பிரெட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
நீர்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் :
மழைக்காலங்களில் நீர்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய் முள்ளங்கி போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.