வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கா படத்தயாரிப்பாளர் வீட்டில் சோதனை….!!!
லிங்கா பட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.
கன்னட சினிமாவை சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர். எனவே இவர் லிங்கா படத்தை ரஜினிகாந்தை வைத்து எடுத்துள்ளார்.
மேலும் இவர் கன்னட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் 300-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.