8,200ரூபாய்க்கு புதிதாக களமிறங்கும் ஹவாய் Y5 லைட்! அதன் சிறப்பம்சங்கள்!!

Default Image

ஹவாய் நிறுவனம் தற்போது புதிதாக புத்தாண்டிற்கு ஒரு மாடலை பட்ஜெட் விலையில் களமிறக்கி உள்ளது.ஆனால் இந்த மாடலை தற்போது பாகிஸ்தானில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை.

இதன் டிஸ்பிளே அளவு 18:9 கொண்டதாக உள்ளது. இந்த கேமிரா அமைப்பு 8 மெகா பிக்சல் ஆகவும், 1ஜிபி ரேம் திறனுடன் வெளியாகியுளளது. ஆண்ட்ராயிடு 8.1 ஓரியோ வெர்ஷனுடன் இந்த மாடல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 9 லையிட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 8.1 இயங்குதளம் கொண்டே இயங்குகிறது.

இந்த வகை ஸ்மார்ட் போன் இந்திய மதிப்பில் 8,200 ருபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் கருப்பு,நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேட்டரி திறன் 3,200mAh ஆக உள்ளது. 16 ஜிபி மெமோரி திறன் இதில் உள்ளது. இந்த மாடல் விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு இறக்கப்படும் என தெரிகிறது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்