எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

Default Image

மாநிலங்களவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு மாநிலங்களவை இன்று கூடியதும், மேகேதாட்டு, ரபேல் விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். முழக்கங்களை எழுப்பி நேரத்தை கடத்தாமல், ஆரோக்கியமான விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால், மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

மக்களவையில் கூடியதும், மேகேதாட்டுவில் ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவை முன்பு திரண்டு கூச்சலிட்டனர். இதனால், அவை பணிகள் பாதிக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Tirupati
pongalgift
news of live
goa
california fire accident
martin guptill