இந்த பொங்கல் விஜய் டிவிக்கு செம கலெக்ஷ்ன்!! நீண்டு கொண்டு போகும் புதுபட ரிலீஸ்!!
பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில் புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள்.
இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள்.
இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை, விக்ரம் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் ஆகிய நான்கு வெற்றிப்படங்களை திரையிட்டு டி.ஆர்பியை எகிற வைத்துள்ளது.
இதற்கு போட்டியாக மற்ற டிவி சேனல்கள் என்ன செய்வெதென தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.
DINASUVADU