திருவாரூர் இடைத்தேர்தல்: குக்கர் சின்னம் ஒதுக்க தினகரன் கோரிக்கை …!
திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார். இனிவரும் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.