திமுகவிற்காக வைகோ வாக்கு சேகரித்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும்…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
திமுகவிற்காக வைகோ வாக்கு சேகரித்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனவரி 27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இடைத்தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்.திமுகவிற்காக வைகோ வாக்கு சேகரித்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும் .ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் சுதந்திரமான, முழுமையான சிகிச்சை அளித்திருக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.