சொறி ,சிரங்குகளை முற்றிலும் நீக்கும் பீர்க்கங்காயின் அற்புதமான குண நலன்கள்….!!
பீர்க்கங்காய் இது வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது.மேலும் இதன் தோல்பகுதி கரடுமுரடாக இருப்பதால் பெரும்பாலும் இதை யாரும் வாங்கி பயன்படுத்துவது இல்லை.இதில் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது .மேலும் இதனை வாரம் ஒருமுறை கண்டிப்பாக பயன்படுத்தினால் மிகுந்த நன்மை அளிக்கும் .
பீர்க்கங்காய் குணநலன்கள் :
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் பதிலாக பீர்க்கங்காயை பயன்படுத்தினால் மிகவும் நல்லது .இதன் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் கட்டுப்பாடிக்குள் வரும் .சொறி ,சிரங்கு, நாற்பட்ட புண்கள் ,காய்ச்சல் குணமாக பீர்க்கங்காயை சாம்பார் வைத்து சாப்பிட்டு வந்தால் அவை குணமாகும்
சொறி ,சிரங்கு, நாற்பட்ட புண்கள் உள்ள இடங்களில் இதன் இலையை அரைத்து போட்டு வந்தால் குணமாகும் .மேலும் இரத்த சோகை, மூலம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து நீர் விட்டு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம் .மேலும் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பீர்க்கங்காய் நார் மிக சிறந்த மருந்தாகும்.இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.மேலும் பீர்க்கங்காயை வாரம் ஒரு முறை கண்டிப்பாக பயன்படுத்தினால் இது இரத்தத்தை சுத்தபடுத்துகிறது.