இறந்தாக கூறப்பட்ட பெண் உயிரெழுந்து-மீண்டும் இறந்ததால் பரபரப்பு…!
கர்நாடக மாநிலம், தேவரகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் திருமணமான பெண் நாகவேணி கொடேரா.கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அந்த கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு குழந்தையைப் பெற்றெடுத்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நாகவேணியின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைப்பெற்று கொண்டிருந்தது. அப்போது இறந்தாக கூறப்பட்ட அப்பெண் திறந்து பார்த்ததோடு கை, கால்களையும் அசைத்துள்ளார்.இதனைக் கண்ட உறவினர்கள், உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்