ராயல் என்பீல்ட் புதிய மாடல் : 650 ட்வின்ஸ் என்ஜின் : 3.70 லட்சம்?!

Default Image

650 ட்வீன்ஸ் எஞ்சின் பெற்ற ராயல் என்பீல்ட் புதிய மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிசைன் : இந்திய சந்தைகளில் விற்பனையாகி உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் அடிப்பையிலே உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ முகப்பு விளக்குடன் மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கை வசதியுடன் இது கிடைக்கும்.

1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையிலேயே ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

நுட்ப விபரம் : என்ஜினுக்கு அடுத்து கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் உள்ள மற்ற வசதிகளை காணலாம், முன்புறத்தில் 110 மிமீ பயணிக்கும் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 88 மிமீ பயணிக்கும் ட்வீன் கேஸ் சார்ஜ்டு காயில் ஸ்பிரிங் சுற்றப்பட்ட ஷாக் அப்சார்பரினை பெற்று 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
முன்jபுறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

எரிபொருள் இல்லாமல் 198 கிலோ கிராம் எடை கொண்டுள்ளது. டேங்க் கொள்ளளவு 12.5 லிட்டர் கொண்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளது. இதனால் உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக இருக்கும்.

விலை : சர்வதேச அளவில் 600சிசி முதல் 750சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட மிகவும் சவாலான விலையில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் ரூ.3.70 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்