தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்….!!!!

Default Image

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெறவுள்ளது.
நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து கூறுகையில், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்த பின்பு தான், திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கட்டட பணிகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். நடிகர் விஷால் – அனிஷா இருவருக்கும் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து விஷால் குடும்பம் ஐதராபாத்துக்கு செல்லவுள்ளது.
மேலும் இந்த நிச்சயதார்த்தத்தில் திருமண தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்