வரலாற்றில் இன்று நவம்பர் 26-மும்பையை ரத்தகறையாக மாற்றிய தீவிரவாதிகள்…!

Default Image

வரலாற்றில் இன்று நவம்பர் 26 – 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மிகவும் பயங்கரமான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர். இவர்கள் இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையின் மிகவும் பிரபலமான தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி முனையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர். குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர். உலகை அதிரச் செய்த இத்தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் இவன் தூக்கிலிடப்பட்டான். இந்த தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் முதலில் மறுத்தது. பின்னர் அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என ஒப்புக்கொண்டது. என்றாலும் இத்தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது. தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தண்டிப்பதாக கூறி வருகிறது. என்றாலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் குற்றமற்றவன் என்று பாகிஸ்தான் விடுதலை செய்து விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்