பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அணுகவும்: மாநகராட்சி ஆணையர்…!!
சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலத்தில், பிளாஸ்டிக் இல்லாத புத்தாண்டு என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இதில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய நிறுவனங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.