இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் 2ம் இடத்தை பிடித்தது தமிழகம்…!!
கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் 64 சதவீதம் நகர்புறங்களிலும் 36 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக கிராமப் புறங்களில் வசிப்போரில் 41 புள்ளி ஒன்பது, எட்டு சதவீதம் மக்கள் இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் முதலாவது இடத்தில் இருக்கும் ஹிமாச்சல் பிரதேசத்தில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 43 புள்ளி மூன்று, ஆறு சதவீத மக்கள் இணைய தள சேவையை பெற்றுள்ளனர்.