பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு….!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 13 ஆயிரத்து 276 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 83 ஆயிரத்து 831 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 1 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும் 17 ஆயிரத்து 268 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 86 ஆயிரத்து 340 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.