ஆஸ்திரேலிய வாசிகள்..! கோலியிட்ட டூசன் போயி காத்துக்கோங்க..! விளாசிய வீழ்த்திய ஆஸ்..பயிற்சியாளர்..!!
ஆஸ்திரேலியா -இந்தியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி மெல்ஃபோர்னில் நடந்தது.இதில் இந்தியாவின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா சுருட்டனர்.இது ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளரை சற்று அதிகமாகவே வருத்தமடையச் செய்துள்ளது.மேலும் விளாசி எடுத்த அவர் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய வீரர் புஜாரா ஆகியோரைப் பார்த்து ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மெல்போர்னில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோலி மற்றும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி தன் ஸ்கோரை முன்னிலைப்படுத்தியது. இதில் முக்கியத்துவம் பெற்றது கோலி மற்றும் புஜாராவின் பார்ட்னர்ஷிப் பொறுமையின் உச்சம் என்றேச் சொல்லலாம்.இந்த ஜோடி 414 பந்துகளை எதிர்கொண்டது.இதில் 173 ரன்களை எடுத்தனர். 204 பந்துகளைச் சந்தித்த கோலி 82 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல 319 பந்துகளைச் சந்தித்த புஜாரா 106 ரன்கள் எடுத்து சதமடித்து ஆட்டமிழந்தார்.
இவர்களின் பேட்டிங்க் காரணமாகவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் பின்களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 66.5 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த அவுட் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்களை வருத்தமடைய செய்துள்ளது.
இதுதொடர்பாகப் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் க்ரேம் ஹிக் ஒரு பயிற்சியாளராக இந்தப்போட்டி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. கோலி, புஜாராவின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலை சிறந்த வீரர்கள் கடினமான சூழலிலும் தங்களது இன்னிங்ஸ் மூலம் மாற்றியமைக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். ஆனால் நீங்கள் ஒரே களத்தில் இருக்கும்போது அதுவும் தவறான பகுதியில் இருக்கும் போது தான் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் பேசிய அவர் எங்கள் வீரர்களின் கடின உழைப்பு தோல்வியடைந்துள்ளது ஏமாற்றமாக தான் இருக்கிறது. ஆட்டத்தின் நடுவில் இருக்கும்போது நீங்கள் கற்றுக்கொள்வது எளிதான விஷயமாக இருப்பது இல்லை.மேலும் பாக்ஸிங் டே டெஸ்டில் இவ்வாறு நடைபெறுவது எல்லாம் துரதிர்ஷ்டவசமானது.ஆஸ்.ஆணி வீரர்கள் அனைவரும் இந்த நாள்களில் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்க விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். மறைமுகமாக தனது அணியை விளாசியும் உள்ளார்.