ஹைய்யா.. ஜாலி… 150 நாள் லீவு…!மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் …!
2019-ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும், 210 நாட்கள், வேலை நாட்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 210 நாட்கள் பணியாற்றினால் போதும்.
இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில், பணி நாட்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
150 நாட்கள் விடுமுறை:
ஜனவரி- 11 நாட்கள்
பிப்ரவரி – 7 நாட்கள்
மார்ச்- 9 நாட்கள்
ஏப்ரல் – 16 நாட்கள்
மே- 31 நாட்கள்
ஜூன்- 10 நாட்கள்
ஜூலை- 7 நாட்கள்
ஆகஸ்ட் -11 நாட்கள்
செப்ட்ம்பர் -14 நாட்கள்
அக்டோபர் -12 நாட்கள்
நவம்பர்- 8 நாட்கள்
டிசம்பர் – 14 நாட்கள்
மொத்தம் 150 நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும்.365 நாட்களில், 215 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.அதேபோல் 5 நாட்கள் உள்ளூர் விடுமுறை மற்றும் மழைக்கால விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் செம ஹேப்பியாக மாறியுள்ளனர்.