இந்தியா வரும் வெளிநாட்டினர் சட்ட திட்டங்களை கடைபிடிக்க வேண்டும் -மத்திய உள்துறை அமைச்சகம்…!!
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர், சட்ட திட்டங்களை மீறினால், தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த கேத்தல் மெக்நவுட்டன் என்பவர் தலைமை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து புகைப்படங்கள் எடுத்ததால், மத்திய அரசு அவரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.இந்நிலையில், இந்தியா வரும் வெளிநாட்டினர், இங்குள்ள சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது