கோவையில் வாழைத்தோட்டத்தை துவம்சம் செய்த காட்டுயானை….!!!
கோவை அருகே தெப்பம்பட்டியில் வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள் அட்டகாசம் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் தெப்பம்பட்டி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள், வாழை தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு, தண்ணீரை ஏற்பாடு செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.