பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்! விஸ்வாசம் படத்திற்கு அஜித் கட்டடவுட் மட்டுமே இத்தனை அடியா?!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10இல் படம் வெளியாக உள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர்  என எதுபற்றியும் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இது ஒரு புறம் ரசிகர்களை கோபப்படுத்தினாலும், இன்னொரு பக்கம் தல படத்தை வரவேற்க்க ரசிகர்கள் ஆயத்தமாகி விட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே சர்கார் படத்திற்காக விஜய்க்கு கொல்லத்தில் விஜய்க்கு 175 அடி கட்டவுட் வைக்கப்பட்டது. அதற்கு போட்டியாக தற்போது  விஸ்வாசம் படத்திற்காக அஜித்திற்கு திருச்செந்தூரில் 200அடி கட்டவுட் வைக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment