பூடான் பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு…!!
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமர் லோட்டே செரிங்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூடான் பிரதமராக லோட்டே செரிங் பதவியேற்ற பிறகு அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி, அமைச்சர்கள், அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய பூடான் பிரதமர் இந்தியா வந்துள்ளது மிகவும் மகழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியாவுடனான உறவை மேம்படுத்தி கொள்ள பூடான் அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.