பேட்ட ட்ரெய்லரால் விஸ்வாசம் படக்குழு மீது கடுப்பில் தல ரசிகர்கள்?!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கர்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா என பிரமாண்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இந்த பயத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் , டீசர் என வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று பேட்ட படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதே ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாக உள்ள தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து பாடல்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் தேதியை கூட இன்னும் வெளியிடாமல் ரசிகர்களை கடுபேற்றி வருகிறது. இதனை தல ரசிகர்கள் இணையத்தில் தங்கள் ஆதங்கத்தை மீம்ஸ் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்