நாளை இத்தனை மணிக்கு வெளியாக போகிறது சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' ட்ரெய்லர்!! கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பெரிய நடிகர் பட்டாளத்தையே வைத்து தயாரித்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நாளை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதே போல நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU