நெல்லையில் நான்கு வழிச்சாலை….மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…!!
நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமங்கலத்தில் இருந்து, கொள்ளம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது.இந்த திட்டத்திற்க்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் , விவசாயிகள் அரசியல் கட்சியினர் அமைய இருக்கும் நான்கு வழிச்சாலையை வேறு மாற்று வழித்தடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் என மாற்று அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர்.