காங்கிரஸ் தேவையான தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால் தனித்துப்போட்டி ..!மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் பரபரப்பு தகவல்

Default Image
தேவையான தொகுதிகளை காங்கிரஸ்  ஒதுக்கவில்லை என்றால் தனித்துப்போட்டி என்று முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
Image result for தேவ கவுடா  காங்கிரஸ்
காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.
நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.

இந்நிலையில் அவரது தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவருமான தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில் , நாடாளுமன்ற தேர்தலில் கேட்கும் தொகுதிகளை காங்கிரஸ்  ஒதுக்கவில்லை என்றால் தனித்துப்போட்டி என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்