முந்திரி பருப்பு கேக் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா….?
கேக் என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கேக்குகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கேக்குகளில் பல வகையான கேக்குகள் உள்ளது. இதில் முந்திரி பருப்பு கேக் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- முந்திரி பருப்பு – கால் கிலோ
- சர்க்கரை – 4 கப்
- நெய் – தேவைக்கேற்ப
- ஏலக்காய் போடி – 5 சிட்டிகை
செய்முறை :
முந்திரி பருப்பை நைசாக அரைக்க வேண்டும். பின் கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டி பாகாகக் காய்ச்ச வேண்டும். பின் காய்ச்சிய பாகில் அரைத்த முந்திரி பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும். பின் கலவை இறுக்கி வரும்போது ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
பிறகு நெய் சேர்த்து கிளற வேண்டும். அது நுரைத்து வந்தவுடன் ணெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி பரப்பவும். லேசாக ஆறியதும் அதன் அதன் மேல் நெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரை கேக்கின் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து பேப்பரை எடுக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான சுவையான முந்திரி பருப்பு கேக் ரெடி.