உங்க வீட்ல தோட்டம் இருக்குதா…? அப்ப உங்க வீட்ல தொல்லை இருக்காது….!!!
நாம் தோட்டங்களை ரசிப்பதற்காகவே பல ஆயிரம் செலவு செய்து சுற்றுலா தலங்களுக்கு செல்கிறோம். ஆனால் நாமே நம்முடைய இல்லங்களை சுற்றுலா தலங்களாக மாற முடியும். முடிந்தவரை வீடுகளில் செடி வளர்ப்பது மிக நல்லது. தோட்டங்கள் உள்ள வீட்டில் தொல்லை அதிகமாக இருக்காது.
வீட்டுத்தோட்டம் இருப்பதால் கிடைக்கும் பயன்கள் :
சூட்டை தணிக்கிறது :’
நமது வீட்டின் சூடு வெயில் காலங்களில் மிக அதிகமாக இருக்கும். நாம் வீடுகளில் செடி வளர்க்கும் போது அது நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது.
கட்டிடத்தை பாதுகாக்கிறது :
வெயில் காலங்களில் கட்டிடத்தை பாதுகாப்பதோடு, குளுமையாகவும் இருக்கும். குளிர் காலங்களில் அதிகமான பனி பொலிவினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து காக்கிறது.
புதிய உணவு :
நாம் கடைகளில் நமக்கு தேவையான காய்கறிகளையோ, பழங்களையோ வாங்கும் போது அதில் அதிகமான கெமிக்கல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நாம் நமது வீட்டில் காய்க்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பொது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
சுத்தமான காற்று :
சுத்தமான காற்று தான் ஆரோக்கியமான உடலுக்கு உதவுகிறது. நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இதன் மூலம் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.
புண்ணியம் :
சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து, அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது.
ஆரோக்கியம் :
நமது வீட்டில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி, சுத்தமான காற்று எல்லாம் கிடைத்து விடும்.