விசாரணைக்கு இந்தியா வர முடியாது….நீரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி…!!

Default Image

உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்காக என்னால் இந்தியாவுக்கு  வர முடியாது என்று நீரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது  மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்காக 41 மணிநேரம் பயணம் செய்து விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.இருந்தாலும் நான்  காணொலி காட்சி மூலமாக நடைபெறும் விசாரணையில் ஆஜராக தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire