பாஜக இந்தியா முழுவதும் பலம் பொருந்திய கட்சி ….! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பாஜக இந்தியா முழுவதும் பலம் பொருந்திய கட்சி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், 3-வது அணி அமைந்தால், அது காங்கிரஸ் – திமுகவிற்கு தான் பலவீனம் . ஜனவரி 6-ஆம் தேதிக்கு மேல், பாஜகவை தமிழகத்தில் மலர செய்வதற்கு முயற்சிப்போம் .
அதேபோல் 3வது அணி, 4வது அணி, ஸ்டாலின் செய்ததுபோல உருவாகாத அணி கூட வரலாம். ஆனால் பாஜக இந்தியா முழுவதும் பலம் பொருந்திய கட்சி என கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.