சாண்டாவாக மாறிய கிரிக்கெட் சாம்பவான்..!குழந்தைகளுக்கு இன்ப அதிர்த்தி கொடுத்த சச்சின்..!!வீடியோ உள்ளே..!

Default Image

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான்  என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தினமான இன்று குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு இன்ப அதிர்ச்சி  ஒன்று கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இயேசு நாதர் பிறந்த தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழவாக கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் என்றதுமே நினைவுக்கு வருவது பெரிய ஸ்டார் லைட் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் முக்கியமான ஒருவர் சாண்டா அவர் தரும் பரிசுகள் என்று குழந்தைகள் குதூகலமாகிவிடுவர்கள்.
Related image
இந்நிலையில் இந்த மகிழ்ச்சியை உற்சாகத்தை சச்சின் குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர்களுடன் பகிர்ந்துகொண்டார் .இதில் இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால் சச்சினே சாண்டா கிளாஸ் வேடம் அனிந்து சென்று அங்குள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கி அவர்களோடு கிறிஸ்துமஸ் விழாவை குழந்தைகளுடன் செலவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு வெளியிட்டுள்ள சச்சின் ஹூ ஹூ அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் என்று அஷ்ரே சிறுவர் பராமரிப்பு மையத்தில் உள்ள இளைஞர்களுடன் பழகுவதே ஆச்சர்யமாக இருக்கிறது. அவங்களுடைய அப்பாவி முகங்களின் மகிழ்ச்சிக்கு விலைமதிப்பே இல்லை என்று இருந்தது  எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த கொண்டாடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி என்னவென்றால் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வந்த சச்சின் தனது காரில் இருந்து மையத்துக்கு சென்றுள்ளார்.அங்குள்ள குழந்தைகள் சாண்டா கிளாஸ் தான் பரிசுகளை வழங்கினார் என்று நினைத்த நேரத்தில் அந்த வேடத்திலே சச்சின் அங்கிருந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.பின்னர் சிறிது நேரத்துக்குப் பிறகு தனது வேடத்தைக் களைத்தார்.இதனால் சச்சினைக் கண்ட குழந்தைகள் உற்சாகத்தில் ஒரே துள்ளிக் குதித்தது தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.பின் சிறிதுநேரம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி சச்சின் மகிழ்ந்தார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்