ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததை யாரும் மறுக்கவில்லை …!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததை யாரும் மறுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமனையும், தமிழகத்திற்கு ஆதரவாக நிதின்கட்கரியையும் பேச வைத்து, தற்போது வாக்கு வங்கிக்காக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்கள்.
அதேபோல் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததை யாரும் மறுக்கவில்லை, தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்றே கூறி வருகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.