எந்நாளும் தந்தை பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்திடுவோம்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
எந்நாளும் தந்தை பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்திடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தந்தை பெரியாரின் 45வது நினைவு தினம் ஆகும்.இந்நிலையில் சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்திட, சாதி – மத பேதமில்லா சமுதாயம் அமைந்திட தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பகுத்தறிவு பகலவனின் 45வது நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் தந்தை பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்திடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.