6 வயது இளம்வீரரை களமிரக்கும் ஆஸ்திரேலியா..!!யார் இந்த இளம்வீரர்..?? 3 வது டெஸ்ட் சுவரசியம்..!!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.இந்த போட்டியில் முதல் 2 போட்டி டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்க உள்ளது.இதற்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 3 வது டெஸ்ட் சுவரசியமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 6 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளான்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் இந்த 6 வயது சிறுவனும் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கைடையே செம எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே தனது ட்விட்டர் பக்கத்தில் 6 வயது சிறுவன் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகின்ற 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளான் என்று வெளியிட்டதுள்ளது.
Meet the newest member of the Australian Test team: https://t.co/vmcqkK0tqE @MakeAWishAust | #AUSvIND pic.twitter.com/0EMBSu4yEm
— cricket.com.au (@cricketcomau) December 23, 2018
பங்கேற்க உள்ள 6 வயது சிறுவன் ஆர்ச்சி ஷில்லர் இதய வால்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளான்.ஆனால் இந்த குட்டிக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு பெரிய ஆர்வம் என்றாவது ஒருநாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என்பதே குட்டி விரும்பியுள்ளான்.
This is outstanding! More on Australia's newest Test squad member via @ARamseyCricket HERE: https://t.co/ctXeVwWwOL@MakeAWishAust | #AUSvIND pic.twitter.com/XqBh0mbZUw
— cricket.com.au (@cricketcomau) December 3, 2018
இந்த சுட்டி குட்டி லெக் ஸ்பின்னரும் கூட இந்த தகவலை அறிந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குட்டியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அணியில் சேர்ந்துகொள்ளுமாறு கூறி உள்ளார்.
இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சி ஷில்லர் பங்கேற்கிறான். இந்நிலையில் டெஸ்ட் கோப்பை மற்றும் இரு அணி கேப்டன்களுடன் ஆர்ச்சி ஷில்லர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளான்.
இதில் பந்து வீச பரபரப்பாக உள்ள இந்த குட்டி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு என்று கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளான்.
Watch out Nathan Lyon, Archie's coming for your spot!
MORE: https://t.co/zOHu6KpvYE pic.twitter.com/PEgW1qSITd
— cricket.com.au (@cricketcomau) December 23, 2018