82,69,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி….வேளாண் துறை அறிவிப்பு….விவசாயிகள் மகிழ்ச்சி…!!
தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் விவசாயம் தழைத்துள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் மற்றும் போதிய பருவமழை காரணமாக நடப்பு ஆண்டில் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடியும், 8 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் 21 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானியப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, 11 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பயிர், 2 லட்சத்து 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 3 லட்சத்து ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு மற்றும் 6 லட்சத்து ஆயிரம் ஏக்கர் பரப்பில் எண்ணை வித்துக்கள் என மொத்தம், 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் இந்தாண்டு தற்போது வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளான்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.