பைக்கின் விற்பனையை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகியுள்ளது!
இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் 215,631 அலகுகள் விற்பனை ஆகி உள்ளது.
இதில் 5வது இடத்தில் டிவிஎஸ் ஜுபிடர் கைப்பற்றியுள்ளது. ஸ்கூட்டர் சந்தையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 125சிசி வாகனத்தில் ஹீரோ கிளாமர் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மிக குறைவான எண்ணிகையில் ஹோண்டா டிசைன்கள் உள்ளது.
மொபட்டில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மாடல் 75,037 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது. பல்சர் மற்றும் சிடி100 முறையே 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.