நாடாளுமன்ற தேர்தலில் போட்டி…!ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்..!கமல்ஹாசன் அறிவிப்பு
நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது . ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதன் பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ,நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் .அதேபோல் ஒரே கருத்து ஒற்றுமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.