ஸ்டாலின் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கோபம்…!!
ராகுலை பிரதம வேட்பாளராக முன்னிறுத்திய ஸ்டாலின் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கோபத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சொல்ல ஸ்டாலினுக்கு என்ன அவசரம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கோபம் கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மாநில கட்சிகள் சேர்ந்து காங்கிரஸுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஸ்டாலின் இதை கெடுப்பதாக மம்தா கருதுவதாகவும் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியாது எனும் போது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த யாராவது ஒருவரை பிரதமர் ஆக்கலாம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருதுகிறது.