தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது….!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை (டிசம்பர் 24ஆம் தேதி) கூடுகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மேகதாது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நாளை (24-ம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 12 மணிக்கு கூடுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.