பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு…! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கான பொங்கல் பரிசை அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு எப்போதும் போல் முதலமைச்சர் சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.