கிறிஸ்துமஸ் பண்டிகையை கலகலப்பாக கொண்டாட கலகலா பலகாரம்…!!!
பலகாரம் இல்லாத எந்த பண்டிகையும் கலகலப்பாக இருக்காது. அனைத்து பண்டிகைகளையும் கலகலப்பாக்குவது பலகாரங்கள் தான். எவ்வளவு தான் உறவுகள், பட்டாசுகள் என பண்டிகை நேரங்களில் இருந்தாலும், பலகாரம் இல்லாத பண்டிகையை நினைத்து கூட பார்க்க இயலுவதில்லை. இப்பொது கலகலா பலகாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- மைதா – 1 கிலோ
- டால்டா – 100 கிராம்
- முட்டை – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதா மாவையும், டால்ட்டாவையும் மாற்று உப்பையும் கலந்து நன்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.அதன் பின் 2 முட்டையை உடைத்து ஊற்றி அதையும் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் பிசைந்த மாவை 2 மணி நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் அந்த மாவை எடுத்து நமக்கு தேவையான மற்றும் பிடித்த வடிவங்களில் செய்து பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான கலகலா தயாராகி விட்டது.