கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துமஸ் அடையோடு கொண்டாடுவோம்….!!!
கிறிஸ்துமஸ் பண்டிகையை பலவிதமான பலகாரங்களோடு கொண்டாடுவது நமது தமிழ் பண்பாடு. பண்டிகைகளில் பலகாரங்களும் ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. பலகாரம் இல்லாத பண்டிகை மகிழ்ச்சியாகவே இருக்காது. இப்பொது கிறிஸ்துமஸ் அடை செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு – 1/2 கிலோ
- முட்டை – 2
- பேரீட்ச்சை – தேவைக்கேற்ப
- வாழைப்பழம் – 5
- சீனி – 1/4 கிலோ
- முந்திரி – தேவைக்கேற்ப
- ஏலக்காய் – 5
- உப்பு – தேவையான அளவு
- ஆப்ப சோடா – சிறிதளவு
செய்முறை :
அரிசி மாவில் தண்ணீர் கலந்து, அதன் பின் முட்டை, பேரீட்ச்சை, வாழை பழம், சீனி, ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் முந்திரி, ஏலக்காய் இரண்டையும் நெய்யில் வறுத்தெடுத்து சேர்த்து கொள்ள வேண்டும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடை சுட்டு எடுக்க வேண்டும்.