பொற்கோயிலில் வழிப்பாடு செய்த சச்சின் டெண்டுல்கர்
பொற்கோயிலில் வழிப்பாடு செய்த சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவியுடன் அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தளமான பொற்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் பொற்கோயிலுக்கு சென்று வழிப்பாடு நடத்தினார். அப்போது அவர் தரையில் அமர்ந்து தியானம் செய்தார். இதனிடையே சச்சினின் வருகை குறித்து தகவலறிந்த ரசிகர்கள் அவரை காண குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.