இருசக்கரவாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் இருசக்கரவாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு செல்வதற்காக தனது, இருசக்கர வாகனதை எடுத்துக் கொண்டு உப்பிலிபாளையம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் இருக்கையின் அடியில் இருந்து
புகை வந்துள்ளது.
அதனை அருகில் இருந்தவர்கள் கூறியதையடுத்து வாகனத்தை நிறுத்தி இருக்கையை திறந்து பார்த்த போது திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.