வெனிசுலா மீது பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன்.. கண்டித்த கியூபா ..,
வெனிசுலா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்து உள்ளது. இதற்கு கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வெனிசுலாவின் சமாதான முயற்சிக்கு இது எதிர் விளைவுகளையே உருவாக்கும். வெனிசுலாவை ஏகாதிபத்திய நிர்ப்பந்தம் மூலமாக பணிய வைக்கவே இந்த தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
“பத்து லட்சம் ஐரோப்பிய மக்கள் வெனிசுலாவில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்”-என்பதை ஐரோப்பிய நாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவும் கேட்டு கொண்டு உள்ளார்.