ஆட்சியை பிடித்த அடுத்த நாள்களில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!!!

Default Image

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த மாநிலத்திற்கான முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் தனது முதல் வேலையின் கையெழுத்தாக விவசாய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் கமல்நாத்.இந்நிலையில் அம்மாநில 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
அம்மாநிலத்தில் புதிய முதலமைச்சராக கடந்த திங்களன்று பதவியேற்ற கமல்நாத் . விவசாயக் கடனை தள்ளுபடி செய்த பின்னர் இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் உள்ள 24 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் என மொத்தம் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உத்தரவுக்கு உஜ்ஜயினி, இந்தூர், தார்,  ராட்லம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்